SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – CBIC & CBN தேர்வு நாள் இதோ..!

0
SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - CBIC & CBN தேர்வு நாள் இதோ..!
SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - CBIC & CBN தேர்வு நாள் இதோ..!
SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – CBIC & CBN தேர்வு நாள் இதோ..!

SSC எனும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது தற்போது Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN) Paper I தேர்வு நாள் குறித்த அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை குறித்து முழு தகவல்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை வாசித்து பயனடையலாம்.

தேர்வு தேதி வெளியீடு:

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN) பதவிக்கு என மொத்தமாக 7600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க 1.01.2022 அன்றைய நாளின் படி, CBN பிரிவில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், CBIC பிரிவில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

இதற்கான Paper I தேர்வானது வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Paper I Examination-2021 ஆனது 05.07.2022 அன்றைய நாள் முதல் 22.07.2022 அன்று வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் CBIC & CBN தேர்வுகளானது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் கீழுள்ள லிங்க் மூலம் விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

SSC CBIC & CBN Paper I Exam Date Notification

SSC CBIC & CBN Notification & Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!