SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பதவியில் காலிப்பணியிடங்கள் – ரூ.27 லட்சம் வரை ஊதியம்! முழு விவரம் இதோ!

0
SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பதவியில் காலிப்பணியிடங்கள் - ரூ.27 லட்சம் வரை ஊதியம்! முழு விவரம் இதோ!
SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பதவியில் காலிப்பணியிடங்கள் - ரூ.27 லட்சம் வரை ஊதியம்! முழு விவரம் இதோ!
SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பதவியில் காலிப்பணியிடங்கள் – ரூ.27 லட்சம் வரை ஊதியம்! முழு விவரம் இதோ!

தற்போது SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களில் காலியிடம் ஏற்பட்டுள்ளதால் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் SBI ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று தொடங்கி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பின்படி, வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான SBI ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SO) பணியிடங்களில் இருக்கும் 35 காலியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படும்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் 7 பேர் வழக்கமான நிலையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் 29 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் SBI வங்கியின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம்: ஏப்ரல் 27

கடைசி தேதி: மே 17

எழுத்துத் தேர்வு: ஜூன் 25

அனுமதி அட்டை: மே 17

காலியிடங்கள்: 35

விண்ணப்பக் கட்டணம்:

பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 வசூலிக்கப்படும்.
மற்றபடி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்ப முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SBI இணையதளத்தில் (https://bank.sbi/web/careers) உள்ள இணைப்பின் மூலம் தங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இணைய வங்கி/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.
இப்போது, விண்ணப்பதாரர்கள் தங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அந்த வகையில் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்யாத வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது.
ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கணினியில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பிரிண்ட் அவுட் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

சம்பளம்:

சிஸ்டம் ஆபீசர் பதவி: ரூ.36,000 முதல் ரூ.89,890.

நிர்வாக பதவிகள்: ரூ 15 முதல் 20 லட்சம்

மூத்த நிர்வாகிகள்: ரூ 19 முதல் 24 லட்சம்

மூத்த சிறப்பு நிர்வாகிகள்: ரூ 23 லட்சம் முதல் ரூ 27 லட்சம் வரை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!