தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் படி, இவர்கள் சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அனைத்தும் தற்செயல் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு விடுப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவின் பரவல் உச்சத்தில் இருந்தது. மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கு முதலான பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் எதுவுமே செயல்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டது. அலுவலக பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் வண்ணம் செய்யப்பட்டது.

TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

ஆனால் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் பன்மடங்காக பெருகி கொண்டிருக்கும் வேளையிலும் முன்களபணியாளர்கள் தொடர்ந்து தனது பணியை செய்து கொண்டிருந்தனர். அதாவது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விடுமுறை இன்றி பணியாற்றி கொண்டிருந்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுமே எந்த விடுமுறையும் எடுக்காமல் வேலை பார்த்து வந்தனர். இதனால் மற்ற மக்களை காட்டிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான் கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.

சென்னை: 40 ஆயிரம் ரூபாயை கடந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

அரசு இந்த கோரிக்கையை ஏற்று அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அனைத்தும் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!