TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் - நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் - நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காலியிடங்களுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மார்ச் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI:

தமிழக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது தமிழக காவல்துறை காவல் கண்காணிப்பாளர் (SI) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNUSRB தேர்வு வாரியம் காவலர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு TNUSRB (PC) பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் SI தேர்வுக்கு மார்ச் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மே மாதத்தில் ரிசல்ட் வெளியீடு!

மேலும் இப்பதவிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்த SI தேர்வில் அரசின் புதிய வழிகாட்டுதலின் படி தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேர்வர்கள் நாளை முதல் (மார்ச் 8) ஏப்ரல் 7 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த தகுதிகள், செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, பாடத்திட்டம் மாதிரி கேள்விகள் போன்ற அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவும் வகையில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 044-40016200, 044-28413658 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறியலாம். தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் திறந்த ஒதுக்கீடு மற்றும் துறைசார் கோட்டா பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் காவல் துறை விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பம் ரூ. 1000 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!