குமரி டூ சென்னை இனி சுலபமாக பயணிக்கலாம் – ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிப்பு!

0
குமரி டூ சென்னை இனி சுலபமாக பயணிக்கலாம் - ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிப்பு!

ரயில்வே நிர்வாகத்திற்கு கன்னியாகுமரி – திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பயணிகள் கோரிக்கை:

இந்தியாவில் மிக நீண்ட ரயில் பயணம் கன்னியாகுமரியிலிருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகருக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸில் தான். இந்த வாராந்திர ரயில் 2011ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 4273 கி.மீ வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கான பயண நேரம் என்பது 80 மணி நேரம் 15 நிமிடங்கள். கிட்டதட்ட நான்கு நாள்கள் பயணம்.

  IBPS PO / MT 2023 மதிப்பெண் பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ!

இந்த வாராந்திர ரயிலை 2020ஆம் ஆண்டில் இருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்படும் என ரயில்வே வரியம் அறிவித்தது. அதன் படி, 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்துக்கு நான்கு நாட்கள் ரயிலாக இயங்கி வருகின்றது. நான்கு நாட்கள் செல்லும் இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தலுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாரம் ஏழு நாள்கள் இயக்கும் போது மூன்று நாள்கள் மட்டும் கன்னியாகுமரி டூ சென்னை வழியாக இயக்கலாம் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!