மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி – புதிய திட்டம் இதோ!

0
மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி - புதிய திட்டம் இதோ!

சென்னை மெட்ரோ ரயில் 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி சாதனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

சூரிய மின் சக்தி:

சென்னை மெட்ரோ ரயில் 12 மெட்ரோ ரயில் நிலையங்களில், பார்க்கிங் பகுதிகளில் திறந்த வெளியில் உள்ள உயர்மட்ட பகுதியில் சூரிய மின் சக்தி சாதனங்களை நிறுவ மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், பசுமையைக் காத்தல், பாதுகாப்பான மின் ஆற்றலை பெறுதல் உள்ளிட்ட நோக்கத்துக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ஊக்கமளித்து வந்த நிலையில் பல்வேறு இடங்களின் மேற்கூரையில் சூரிய மின் சக்தி சாதனங்களை நிறுவியது.

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட 6.5 மெகாவாட் அளவுக்கு மேல் சூரிய மின் சக்தி சாதனங்களைப் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தினசரி சரரியாக 29 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் மின்சார கட்டணம் செலவு சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மெட்ரோ ரயில் நிலையங்களில், பார்க்கிங் பகுதிகளில் நிறுவப்படுவதன் மூலம் 2,715 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!