இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற Club House செயலி – சமூக வலைதள பயன்பாடு!

0
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற Club House செயலி - சமூக வலைதள பயன்பாடு!
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற Club House செயலி - சமூக வலைதள பயன்பாடு!
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற Club House செயலி – சமூக வலைதள பயன்பாடு!

இந்த கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சி மக்களை வியப்படைய செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் புதிய அம்சமான ட்வீட் ஸ்பேசஸ் மற்றும் கிளப் ஹவுஸ் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

ட்வீட் ஸ்பேசஸ் மற்றும் கிளப் ஹவுஸ்:

நாட்டில் சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் புதிய பரிமாணம் எடுத்து வருகிறது. அதனால் பயனர்கள் தற்போது மேற்கொண்டு வரும் செயல்கள் அனைத்தும் மிக எளிமையாக மாற்றப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் தற்போது தகவல் பரிமாற்றம் மிக முக்கியமானவையாக இருந்து வருகிறது. இதுவரை டைப்பிங் மெஸேஜ் மூலம் அதிக அளவு மக்கள் தகவல் பரிமாற்றத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஆடியோ முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ஜூம், கூகுள் மீட் போல் ட்விட்டரில் ஸ்பேசஸ் என்கிற புதிய அம்சம் இடம்பெற்றுள்ளது. ட்வீட் பிளஸ் என்கிற ஆப்ஷனை கிளிக் செய்தால் இதனை மேற்கொள்ளலாம். இதில் ஆடியோ பரிமாற்றம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் இந்த அம்சத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபெறலாம் என்றும் அதில் 13 பேர் மட்டும் பேச்சாளர்களாக இடம் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளர்கள் பார்வையாளராக பங்கு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரங்கள்!!

தற்போது இதேபோல் கிளப் கவுஸ் என்னும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் ரூம் என்னும் பக்கத்தில் ஒரே சமயத்தில் 5000 பேர் உரையாடல் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இந்த செயலியில் தங்களுக்கு பிடித்த தலைப்பின் கீழ் உரையாடல் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற அரங்கில் சேர வேண்டும் எனில் அதற்கான முறையான அழைப்பு லிங்க் அல்லது பயனர்களின் அழைப்பு இருந்தால் மட்டுமே சேர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறப்பு அம்சங்கள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!