ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

ஆதார் கார்டில் தங்கள் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

புகைப்படம் மாற்றுதல்:

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக ஆதார் விளங்குகிறது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் அடையாளத்திற்காகவும் இந்திய அரசு வழங்கியுள்ள ஆவணம் ஆதார் அட்டை ஆகும். அனைத்து துறைகளிலும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. அதில் உள்ள ஆதார் எண் நம் வங்கி மற்றும் மொபைல் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும்.

CBSE 12ம் வகுப்பு மதிப்பீடு முறை ஜூன் 14ம் தேதி அறிவிப்பு – வெளியான தகவல்!

இந்த ஆதார் கார்டில் தனி நபரின் சுய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். வங்கி பணப்பரிவர்த்தனை, சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல், பிறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தேவைக்கேற்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிறந்த தேதி தவறாக இருந்தால் மாற்றிக் கொள்ளலாம், வீட்டு முகவரி மாற்றுதல், புதிய தொலைபேசி எண்ணை மாற்றுதல் போன்ற வசதிகளை அளித்துள்ளது. தற்போது ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

எளிய வழிமுறைகள்:

  • அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • UIDAI என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில் சுய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
  • தனி நபரின் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும். இதில் உங்கள் புதிய புகைப்படத்தை பதிவிட வேண்டும்.

  • ரூ.25 + ஜி.எஸ்.டி கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • பிறகு ஆதார் அட்டையில் இடம் பெற வேண்டிய புகைப்படத்தை, அரசு அதிகாரி ஒருவரின் கையொப்பத்துடன் சேர்க்கவும்.
  • URN கொண்டு தங்கள் அட்டையின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.
  • 15 முதல் 20 நாட்களுக்குள் ஆதார் அட்டை மாற்றம் செய்யப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!