Jio வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிப்பு! முழு விபரம் இதோ!

0
Jio வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு - ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிப்பு! முழு விபரம் இதோ!
Jio வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு - ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிப்பு! முழு விபரம் இதோ!
Jio வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிப்பு! முழு விபரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோனுக்கு பிறகு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தி அறிவித்தது. இதை தொடர்ந்து வோடபோன் ஐடியாவை நிறுவனமும் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றத்தை அறிவித்திருந்தது. இந்த வரிசையில் அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் அதன் அனைத்து வரம்பற்ற ப்ரீபெய்ட், ஜியோ போன் மற்றும் டேட்டா ஆட் ஆன் திட்டங்களுக்கும் புதிய கட்டணங்களை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சம் எதிரொலி!

இப்புதிய திட்டங்கள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருக்கும். இப்போது, நிலையான தொலைத்தொடர்பு துறையை உறுதி செய்வதற்காக இந்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் ஜியோவின் மலிவான 28 நாள் ப்ரீபெய்ட் திட்டமானது, தற்போது ரூ.129 இல் இருந்து ரூ.155 ஆகவும், 24 நாட்கள் வரை செல்லுபடியாகும் 1 GB டேட்டா திட்டம் இப்போது ரூ.179 இல் தொடங்கும்.

தொடர்ந்து ரூ.200க்கு கீழ் அதிகபட்ச டேட்டாவை எதிர்பார்க்கும் அனைவருக்கும் விருப்பமாக இருந்த ரூ.199 திட்டமானது, இப்போது ரூ.239க்கு 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில் மற்றும் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜியோ, ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.299 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் இத்திட்டம் வாடிக்கையாளருக்கு தினசரி 2GB டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 SMS ஆகியவற்றை கொடுக்கிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – டிச.3 நேர்காணல்!

அடுத்ததாக ரூ. 329 க்கான 84 நாள் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 6 GB டேட்டாவுடன் இப்போது ரூ.395 க்கும், ரூ.555 திட்டம் இப்போது ரூ.666க்கும் கிடைக்கிறது. தொடர்ந்து 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ.599 க்கான ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2GB டேட்டாவுடன் ரூ.719க்கு கிடைக்கிறது. அடுத்ததாக ரூ.1,299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஜியோ திட்டம் மொத்தம் 24 GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 3,600 SMS உடன் இப்போது ரூ.1,559 ஆக வருகிறது.

மேலும் ரூ.2,399க்கான ஜியோ பேக் 2GB டேட்டா, வரம்பற்ற குரல் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் ரூ.2,879க்கு வழங்கப்படும். இதனுடன் ஜியோ நிறுவனம் அதன் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களின் விலையையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ரூ.51 டேட்டா திட்டம் ரூ.61 ஆகவும், ரூ.101 க்கான திட்டம் ரூ.121 ஆகவும் கிடைக்கிறது. இப்போது ரூ.75க்கான ரீசார்ஜ் திட்டம் ரூ. 91 ஆகவும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!