‘குக் வித் கோமாளி’ சிவாங்கி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிரபல பின்னணி பாடகருடன் கச்சேரி!

0
'குக் வித் கோமாளி' சிவாங்கி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிரபல பின்னணி பாடகருடன் கச்சேரி!
'குக் வித் கோமாளி' சிவாங்கி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிரபல பின்னணி பாடகருடன் கச்சேரி!
‘குக் வித் கோமாளி’ சிவாங்கி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிரபல பின்னணி பாடகருடன் கச்சேரி!

விஜய் டிவி பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான சிவாங்கி மூத்த பாடகருடன் கச்சேரியில் இணையும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிவாங்கி :

விஜய் டிவியில் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தெரியாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி பார்த்து வருகின்றனர். சமீபகாலத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்துதான் படுத்த படுக்கையாக இருந்த என் அம்மா உயிர் பிழைத்து சுகமாகியுள்ளார் என்று வெளியாகிய ஒரு தகவல் அனைவர் மனதையும் சிலிர்க்க வைத்தது. அப்பேற்பட்ட ஷோ மூலமாக பிரபலமானவர் தான் நம்ம வீட்டு செல்லக்குட்டி சிவாங்கி.

சரவணனை புகழ்ந்த சந்தியா, ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த திருப்பம் – ரசிகர்கள் உற்சாகம்!

இவர் 2000 ஆம் ஆண்டில் மே மாதம் கேரளாவில் உள்ள தொடுபுழாவில் இசைக் கலைஞர் கிருஷ்ணகுமார் மற்றும் பின்னணிப் பாடகி பின்னி அவர்களுக்கு முதல் மகளாக பிறந்தவர். அவரது தாய் மொழியாக மலையாளம் உள்ளது. சிவாங்கியின் பெற்றோர் இருவருமே கலைமாமணி விருது பெற்றவர்கள் ஆவர். இவரும் முதல் முதலாக சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் 7 ல் பங்கேற்று அவரது அசத்தலான குரல் வளம் காரணமாக ரசிகர்களை மயங்கினார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல நம்ம சிவாங்கி முதல் சுற்றில் கலக்கியிருந்தார்.

சிவாங்கி பாடியபொழுது அனைவரும் யாரு இந்தப் பொண்ணு இவ்வளவு அருமையாக பாடுகிறது என்று பாராட்டினார். பின்னர் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேச ஆரம்பித்தபொழுது இவருடைய குரலை கேட்டு அனைவருக்கும் வியப்பு. ஏனெனில் இவர் பாடும்பொழுது இவருடைய குரல் பெரியவரை போல் இருக்கும். ஆனால் போசும்பொழுது இவருடைய குரல் குழந்தைபோல இருக்கும். இதனால் பலராலும் கிண்டல் செய்யப்பட்டார்.

இவ்வாறு வெகுளித்தனமான பேச்சு மற்றும் அற்புத குரல் வளத்தோடு சேர்த்து காமெடியிலும் குக் வித் கோமாளியில் கலக்கி விஜய் டிவி ரசிகர்கள் மட்டுமின்றி பல சேனல்களின் ரசிகர்கள் மத்தியிலும் வெகு பிரபலமானார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கியின் லேட்டஸ்ட் போஸ்டை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது வரும் ஏப்ரல் 10 பெங்களூரில் முரளியின் மெளனராகம் என்ற மியூசிக் ட்ரூப்பின் இசை கச்சேரியில், மூத்த பின்னணி பாடகர் மனோவுடன் தான் பாட உள்ள தகவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பான போஸ்ட்டரை ஷேர் செய்துள்ள சிவாங்கிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!