தற்கொலை செய்து கொள்ளப்போகும் வெண்பா, தடுத்த ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி வருபவை!

0
தற்கொலை செய்து கொள்ளப்போகும் வெண்பா, தடுத்த ஷர்மிளா -
தற்கொலை செய்து கொள்ளப்போகும் வெண்பா, தடுத்த ஷர்மிளா - "பாரதி கண்ணம்மா" சீரியலில் இனி வருபவை!
தற்கொலை செய்து கொள்ளப்போகும் வெண்பா, தடுத்த ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவை பாரதி திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என சொல்ல மனம் உடைந்த வெண்பா தற்கொலை செய்து கொள்ள போகிறார். இந்நிலையில் ஷர்மிளா அவரை காப்பாற்றி நான் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல அடுத்து வர போகும் எபிசோடுகளில் பெரிய திருப்பம் காத்திருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பல மாற்றங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. பாரதி கண்ணம்மாவும் சேர்வார்களா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது அறிமுகமாகி இருக்கும் புதிய கதாபாத்திரங்களால் பல திருப்பங்கள் வர இருக்கிறது. சௌந்தர்யாவின் நண்பர் விக்ரம் புது மருத்துவமனை திறக்க அதில் பாரதி டாக்டராக இருக்க வேண்டும் என கேட்கிறார். அதற்கு பாரதி சரி என சொல்ல அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் அங்கே கண்ணம்மா வேலைக்கு சேர அதனால் இருவரும் தினமும் சந்தித்து கொள்ள போகிறார்கள். கண்ணம்மா மீது பாரதிக்கு மீண்டும் காதல் வர இருக்கிறது. இதெல்லாம் இனி வர போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மறுபக்கம் வெண்பாவை பாரதி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொல்லிவிடுகிறார். அதனால் மனம் உடைந்து போன வெண்பா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

வெண்பா பாரதியை திருமணம் செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்ய போகிறார். அப்போது ஷர்மிளா வந்து வெண்பாவை தடுத்து நிறுத்த, உனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை நான் பார்க்கிறேன் என சொல்கிறார். பின் மாப்பிள்ளையை தேடி அவர் ஒரு மருத்துவமனைக்கு செல்வது போல காட்சிகள் காட்டப்பட இருக்கிறது. அதனால் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!