‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா வரை – Social Mediaவில் சம்பாரிக்கும் சீரியல் நடிகைகள்!

0
'பாரதி கண்ணம்மா' ரோஷினி முதல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா வரை - Social Mediaவில் சம்பாரிக்கும் சீரியல் நடிகைகள்!
'பாரதி கண்ணம்மா' ரோஷினி முதல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா வரை - Social Mediaவில் சம்பாரிக்கும் சீரியல் நடிகைகள்!
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா வரை – Social Mediaவில் சம்பாரிக்கும் சீரியல் நடிகைகள்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உள்ள நிலையில் சீரியல் நடிகைகள், படப்பிடிப்புகளை விட சமூக வலைத்தளங்களில் செய்யும் விளம்பரங்கள் மூலமாக ஏகப்பட்ட பணம் சம்பாரிக்கின்றனர். அந்த வரிசையில் இருக்கும் முன்னணி நடிகைகள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகைகள் சம்பளம்:

நடிகை நடிகர்கள் பலர் சீரியல்களிலும் படங்களிலும் எந்த அளவிற்கு நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனரோ அதே அளவிற்கு விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர். பல பாலிவுட் நடிகர்கள் கூட விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். மறுபக்கம் பெரிய பெரிய துணிக்கடை முதலாளிகள் பலர் அவர்களது கடை விளம்பரத்தில் அவர்களே நடிக்கின்றனர்.

தமிழக ரேஷன் கடைகளில் மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு – அரசின் முக்கிய அறிவிப்பு!

இப்படி தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும் காலம் போய் தற்போது இன்ஸ்டாகிராமில் சிறு தொழிலார்களுக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் பல சீரியல் நடிகைகள் இறங்கி இருக்கின்றனர்.

நடிகை சுஜிதா தனுஷ்:

இவர் சிறு குழந்தையாக இருக்கும் போதே நடிக்க தொடங்கியவர். நடிகர் அஜித்துடன் `வாலி’ படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். அதன் பின் சீரியலில் களமிறங்கிய அவர் பல ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார். இதுவரை அந்த சீரியல்கள் கொடுக்காத வரவேற்பை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொடுத்திருக்கிறது. அந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் 9.75 லட்சம் ஃபாலோவர்களை வைத்திருக்கும் அவர் பல இன்ஸ்டா விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ரோஷினி:

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மூலமாக நடிப்புத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ரோஷினி. இவர் தற்போது சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சமையல் செய்து வருகிறார். நடித்த முதல் சீரியலிலேயே நல்ல பிரபலமான அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9.69 லட்சம் ஃபாலோவர்களை கொண்டிருக்கிறார். இவர், அழகு சாதனங்கள், ஆடைகள் முதலானவை தொடர்பான விளம்பரங்களைப் பதிவிட்டு வருகிறார்.

நடிகை ப்ரீத்தி சர்மா

சன் டிவியின் `சித்தி 2′ சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி சர்மா. அவர் தற்போது தான் நடிக்க தொடங்கிய நிலையில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார். மேலும் நடிகர் கருணாஸ் அவர்களின் மகன் உடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்து இருக்கிறார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் 6.68 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ளார். மேலும், இதில் அழகு சாதனப் பொருள்கள், அணிகலன்கள் முதலான விளம்பரங்களையும் பதிவிட்டு வருகிறார்.

நடிகை ராதிகா ப்ரீத்தி

சன் டிவியில் `பூவே உனக்காக’ சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. ஆனால் சமீபத்தில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி 4.65 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ளார். இதில் அவர் அழகு சாதனம், வளையல் ஆகிய விளம்பரங்களைப் பகிர்ந்து வருகிறார்.

நடிகை கம்பம் மீனா

தமிழ் சின்னத்திரையில் டாப் வரிசையில் இருக்கும் பல சீரியலில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை கம்பம் மீனா. அவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் சீரியல்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். அது மட்டுமில்லாமல் அவர் தனது இன்ஸ்டாகிராமில் 31 லட்சம் ஃபாலோவர்களை வைத்திருக்கிறார். அழகு சாதனம் குறித்து இவர் பதிவிடும் விளம்பரங்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

நடிகை வினுஷா தேவி:

டிக்டாக் செயலி மூலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் வினுஷா தேவி. அவருக்கு அதன் மூலம் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் 2.19 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ளார். இவர், புடவை, ஆடைகள், அணிகலன்கள் முதலான விளம்பரங்களை பகிர்ந்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!