மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தெலுங்கில் வெப் சீரீஸ் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த காயத்ரி என்ற நடிகை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர்.

நடிகை மரணம்:

தெலுங்கு சின்னத்திரையில், பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை காயத்ரி. அவர் சீரியல் மற்றும் வெப் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களில் தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான ரோகித் என்பவருடன் பங்கேற்றார். ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆட்டம் பாட்டம் என அவர் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு கடைசியில் மது அருந்தினார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்கள் அறியாத புதிய தகவல்கள்!

அதன் பின் மது போதை தலைக்கேறிய நிலையில் தங்களது வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். ரோகித் குடிபோதையில் கார் ஓட்டியதாக தெரிகிறது. காயத்ரி காரில் அவருடன் பயணம் செய்துள்ளார். இதையடுத்து கச்சிபௌலி என்ற இடத்தில் மலைப்பகுதியில் ரோகித் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் வேலை செய்துக் கொண்டிருந்த தோட்டக்காரப் பெண் மகேஸ்வரி மீது மோதி சாலையோர தடுப்பில் மோதி நொருங்கியது.

இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரில் அமர்ந்திருந்த காயத்ரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரோகித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரோகித் மது அருந்திவிட்டு கார் ஓட்டினாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான நடிகையின் இழப்பு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!