விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்கள் அறியாத புதிய தகவல்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இளசுகளை பொறாமைப்படும் அளவிற்கு காதல் செய்யும் கோபி கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நடிகர் சதீஸ் பற்றிய தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் சதீஸ்:
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் அம்மா பாசத்தில் இருக்கும் இளைஞர்களை கூட கவர்ந்த சீரியல். இந்த சீரியலில் இல்லத்தரசியான பாக்கியா தனது வாழ்க்கையில் படும் கஷ்டங்களை பற்றி கதை இருக்கிறது. அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் நடிகர் சதீஸ். அவர் சீரியலில் செய்யும் காதல் காட்சிகள் 20கே கிட்ஸ் காதலுடன் போட்டி போடும் அளவிற்கு இருக்கும். 40 வயதில் தன்னுடைய குடும்பத்தை விட்டு தன்னுடைய கல்லூரி காதலியை கைப்பிடிக்க இருக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தான் கதையின் மையக் கருத்தாக காட்டப்படுகிறது.
ராஜா ராணி 2 சித்து & ஸ்ரேயாவிற்கு நடந்த சோகம் – அவர்களே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஆறுதல்!
ஆனால் தன்னுடைய கணவரை முழு மனதுடன் நம்பும் பாக்கியாவிற்கு இந்த உண்மை எதுவும் தெரியாமல் இருக்கிறது. அதையே காரணம் காட்டி விவாகரத்து வாங்க நினைக்கிறார். இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தை ஏகப்பட்டோர் திட்டி வருகின்றனர். கோபியாக நடித்து வரும் சதீஸ், ஹீரோவாக முதன்முதலாக மின்சாரப்பூவே படத்தில் நடித்தார். அதன் பின் ராமானுஜம் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதில் அவருடைய கெட்டப் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் MGR வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எம்ஜிஆர் ஆக நடித்து இருந்தார்.
பின் சின்னத்திரையில் சூலம், கல்யாண பரிசு2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்கல விலாஸ், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்றவற்றில் நடித்து இருக்கிறார். மேலும் பல விளம்பரப் படங்களில் அவர் நடித்து இருக்கிறார். ஆனால் தற்போது கோபி கதாபாத்திரம் தான் ஏகப்பட்ட மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கோபி எப்போது வீட்டில் சிக்குவார் என்பதே சீரியல் பார்க்கும் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. மேலும் சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க கோபி கதாபாத்திரமும் முக்கிய காரணமாக உள்ளது.