பிக் பாஸில் சீரியல் நடிகை ரச்சித்தா.. வெளியே எட்டிக்கு போட்டியாக முன்னாள் கணவர் செய்த காரியம்!
விஜய் டிவியின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ரச்சித்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார். மேலும் இவரின் முன்னாள் கணவர் தினேஷும் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.
தினேஷ் – ரச்சித்தா:
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரிய வந்தவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர் பின்னர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என பல தொடர்களில் நடித்தார். ரச்சித்தா தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் சில ஆண்டுகளாக தன் கணவர் தினேஷை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.
தீபாவளிக்கு அரசு வழங்கும் செம கிப்ட்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
Exams Daily Mobile App Download
பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த பொழுது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக தினேஷ் சீரியலில் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சன் டிவியில் தொடங்க இருக்கும் புதிய தொடரின் மூலம் தினேஷ் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.
மேலும் இவருடன் இந்த தொடரில் விஜே அக்னி, ப்ரீத்தி சர்மா, நிவிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரசிகர்கள் பலரும் ரச்சித்தா ஒருபக்கம் அடுத்தடுத்த உயரத்துக்கு சென்று கொண்டே உள்ளார். தற்போது அவருக்கு போட்டியாக தினேஷும் தன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்