தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

0
தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு 1700 என்ற அளவை கடந்து இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அளித்த அறிக்கையின் படி இன்றைய பாதிப்பு நிலவரங்களை காண்போம்.

தினசரி பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த வரம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்து 1,700 என்ற அளவை கடந்து இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. அரசு சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 டைட்டில் வின்னர் – ஸ்ரீதர் சேனா யார் தெரியுமா?

அதன்படி, தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 1,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 26,58,923 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 19 பேர் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இன்று 27 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,509 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 1,662 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,250 கால்நடை மருத்துவர் காலிப்பணியிடங்கள் – விவசாயிகள் கவலை!

இதுவரை மாநிலம் முழுவதும் குணடமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 26,06,153 பேர் ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,51,880 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை 4,65,38,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று ஒரே நாளில் 186 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 549270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!