10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் – தமிழக அரசு அறிவிப்பு!

0
10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு!
10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு!
10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரையில் வழக்கப்படாமல் இருந்த செம்மொழி விருதுகள் பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

செம்மொழி விருதுகள்:

செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பினை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்தியாவிலேயே உயரிய விருதாக கருதப்படுகிறது. அதற்காக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழுடன் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையுடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. மேலும், 2006-ல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.

IPL 2021: MI vs PBKS: மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2008-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் முதல்வர் ஆவார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கருணாநிதி, தமது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை அந்நிறுவனத்தில் நிறுவினார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படும்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

முதன்முதலாக 2009ஆம் ஆண்டிற்கான விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2010 ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளாக செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், திமுக தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய ஆட்சியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ்விருது தற்போது தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழ் விருது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டுப் பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்கள்:

2010 – முனைவர் வீ.எஸ். இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania)

2011 – பேராசிரியர் பொன். கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

2012 – பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி ( முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)

2014 – பேராசிரியர் கு. மோகனராசு (முன்னாள் பேராசிரியர் & தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

2015- பேராசிரியர். மறைமலை இலக்குவனார் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி)

2016 – பேராசிரியர் கா. ராஜன் ( முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)

2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், (Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany)

2018 – கவிஞர் ஈரோடு தமிழன்பன் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை)

2019 – பேராசிரியர் கு.சிவமணி ( முன்னாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!