தமிழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 2022 – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 2022 - அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 2022 - அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 2022 – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனை தமிழக பொறியியல் மாணவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செமஸ்டர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி விட்டு தேர்வுகளை மட்டும் நேரடி முறையில் நடத்துவது சரியில்லை, அதனால் மீண்டும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவே நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது.

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பிப்.12 முதல் தேர்வு – அட்டவணை வெளியீடு!

கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து செமஸ்டர் தேர்வானது பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. செமஸ்டர் தேர்வானது பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. வாட்ஸ்அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல் வழியாக விடைத்தாளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

IPL ஸ்பெஷல்: சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. coe1.annauniv.edu என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல் வழியாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே அவை மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here