TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பிப்.12 முதல் தேர்வு – அட்டவணை வெளியீடு!

0
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பிப்.12 முதல் தேர்வு - அட்டவணை வெளியீடு!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பிப்.12 முதல் தேர்வு - அட்டவணை வெளியீடு!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பிப்.12 முதல் தேர்வு – அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

TRB தேர்வு:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (TRB) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

IPL ஸ்பெஷல்: சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 12.02.2022 முதல் 20.02.2022 வரையிலான காலங்களில் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் 12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்கு காலை, மாலை என 2 வேளைகளில் கணினி முறையில் நடத்தப்படும் இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று (ஜன.28) ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!

மேலும் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தேர்வர்கள் தங்களுக்கான அனுமதி சீட்டுகளை ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பெற்றுக்கொள்ளலாம். தவிர ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதுகலை பட்டதாரி ஆசிரிய பதவிக்கான தேர்வு கால அட்டவணை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

12 பிப்ரவரி, 2022
  • தமிழ் 1 – காலை
  • தமிழ் 2 – மாலை
13 பிப்ரவரி, 2022
  • வர்த்தகம் – காலை
  • வீட்டு அறிவியல் – காலை
  • இந்திய கலாச்சாரம் – காலை
  • இயற்பியல் – மாலை
14 பிப்ரவரி, 2022
  • புவியியல் – காலை
  • அரசியல் அறிவியல் – காலை
  • வரலாறு – காலை
  • வேதியியல் – மாலை
15 பிப்ரவரி, 2022
  • பொருளாதாரம் – காலை
  • தாவரவியல் – காலை
  • உயிர்வேதியியல் – காலை
  • விலங்கியல் – மாலை
  • உடற்கல்வி – மாலை

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!