ஆர்யனுடன் திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய மாற்றம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
ஆர்யனுடன் திருமணத்திற்கு பின் 'செம்பருத்தி' ஷபானாவின் புதிய மாற்றம் - ரசிகர்கள் வாழ்த்து!
ஆர்யனுடன் திருமணத்திற்கு பின் 'செம்பருத்தி' ஷபானாவின் புதிய மாற்றம் - ரசிகர்கள் வாழ்த்து!
ஆர்யனுடன் திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய மாற்றம் – ரசிகர்கள் வாழ்த்து!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரினை மாற்றி அமைத்துள்ளார்.

ஆரியன் – ஷபானா:

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் பலரும் தன்னுடன் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளையே திருமணம் செய்து கொள்வர். அப்படி திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் தான் ப்ரஜின் – சாண்ட்ரா, செந்தில் – ஸ்ரீஜா, சஞ்சீவ் – ஆலியா மனசா. இவர்களது வரிசையில் தற்போது புதிதாக நடிகர் ஆரியன் மற்றும் நடிகை ஷபானா இருவரும் இணைந்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகர் ஆரியன்.

பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

இருவருக்கும் சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட நட்பு தான் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரையும் காதலிப்பது குறித்த வதந்திகள் வேகமாக பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் தங்களது காதல் பற்றி கடந்த மே மாதம் அறிவித்தனர். பின்னர் அவ்வப்போது தாங்கள் இருவரும் இணைத்து இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் நடிகை ஷபானா பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி மிகவும் எளிமையான முறையில் இருவரது திருமணமும், நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது.

“நீ இன்னும் சாகவில்லையா” என கேட்ட ரசிகர் – நடிகை யாஷிகா ஆனந்தின் மனதை உருக்கும் பதில்!

இந்த புதுமண ஜோடி பாண்டிச்சேரி சென்று தங்களது தேனிலவினை கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுவாகவே திருமணம் முடிந்ததும் நடிகைகைகள் தங்களது கணவரின் பெயரினை சமூக வலைதள பக்கத்தில் மாற்றுவது வழக்கம். அதற்கு நடிகை ஷபானா விதிவிலக்கல்ல. தற்போது தனது பெயரின் பின்னால் தனது கணவர் பெயரான ஆரியன் என்பதனையும் சேர்த்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!