“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய முல்லையாக ஷபானா, விலகும் காவ்யா? ரசிகர்கள் ஷாக்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் புதிய முல்லையாக ஷபானா, விலகும் காவ்யா? ரசிகர்கள் ஷாக்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய முல்லையாக ஷபானா, விலகும் காவ்யா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடம் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல திருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் தினசரி எபிசோடுகளில் காட்டப்படுவதே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக கதிர் முல்லை காதல் காட்சிகள் இருக்கிறது. இதற்கு முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்தார். அவரது மறைவிற்கு பின் அவரது கதாபாத்திரத்தில் யார் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் இருந்தது.

மீனாவால் குடும்பத்தில் உருவாகும் புதிய பிரச்சனை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் குழப்பத்திற்கு விடையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா தேர்வு செய்யப்பட்டார். அவர் சித்ரா சாயலில் இருப்பதால் ரசிகர்கள் அவரை முல்லையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் முல்லையாக நடிக்க தொடங்கி தற்போது ஒரு வருடம் ஆன நிலையில், அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் கேட்கப்பட்டது. அப்போது இரண்டுமே டாப் சீரியல் என்பதால் விலகுவது குறித்து யோசித்தேன். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகியதாக சொல்லி இருந்தார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய தாமரைச்செல்வி – ரசிகர்கள் ஷாக்!

அப்போ நல்ல பட வாய்ப்புகள் வந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவீங்களா என கேட்டதற்கு நல்ல வாய்ப்பு வந்தால் விலகுவேன் என பதில் அளித்து இருக்கிறார். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முல்லை விலகுகிறார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது கதாபாத்திரத்தில் மீண்டும் யார் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் ஆராய கிளம்பிவிட்டனர். அதில் முதல் வாய்ப்பாக ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானா இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here