விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய தாமரைச்செல்வி – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய தாமரைச்செல்வி - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய தாமரைச்செல்வி - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய தாமரைச்செல்வி – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக தாமரை வெளியேறி இருக்கிறார். மேலும் 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு சென்றிருக்கின்றனர்.

பிக்பாஸ் எலிமினேஷன்:

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார இறுதிக்கு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் கமல் வந்து அடுத்த வாரம் இறுதி சுற்றிற்கு சென்ற போட்டியாளர்கள் குறித்து அறிவிப்பார் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மக்களின் குறைவான வாக்குகள் பெற்று யார் வெளியேறுவர் என ஆவலுடன் மக்கள் இருக்க, நேற்று வரை குறைவான வாக்குகள் பெற்று நிரூப் இருப்பதாக செய்தி பரவியது. ஏற்கனவே பிக்பாஸ் கொடுத்த ரூ.12 லட்சம் பணத்துடன் சிபி வீட்டை விட்டு வெளியேறினார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்துடன் இணைந்த “பாக்கியலட்சுமி” ஸ்கூல் டீச்சர் – ரசிகர்கள் ஷாக்!

தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, நிரூப், தாமரை, அமீர் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களில் அமீர் ஏற்கனவே டிக்கெட் டூ பைனல் டாஸ்க் வென்றுள்ளதால் அவர் பிக்பாஸ் இறுதி சுற்றிற்கு நேரடியாக செல்கிறார். இந்த வாரம் நிச்சயம் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதால் 5 பேர் மட்டுமே இறுதி போட்டியில் போட்டி போடுவார்கள். இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி தாமரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு நிஜ திருமணமா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதனால் தாமரை ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தாமரை இதுவரை நன்றாக விளையாடி வந்த நிலையில், அவர் வெளியேறியது ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 12 லட்சத்துடன் வெளியேறி இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய எபிசோடில் இது பற்றி பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!