1 – 9ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

0
1 - 9ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அனுமதி!
1 - 9ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அனுமதி!
1 – 9ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

குஜராத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜனவரி 8 ஆம் தேதியன்று மூடப்பட்ட பள்ளிகள்,இன்று (பிப்.7) முதல் மீண்டுமாக 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு திறக்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து, குஜராத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான நேரடி பள்ளிகள் இன்று (பிப்.7) முதல் மீண்டும் திறக்கப்பட்டன. அந்த வகையில் அரசு வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் (SOPs) படி ஆப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் ஜனவரி 8 ஆம் தேதியன்று இடைநிறுத்தப்பட்டன.

தமிழக அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசுடன் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ – கால அவகாசம் நீட்டிப்பு!

ஆனால் 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போலவே செயல்பட்டு வந்தது. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்றும், அவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு திரும்புவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிப்.8ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

மேலும் அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி, பள்ளி மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து மற்ற அனைத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளையும் பின்பற்றியதாக பள்ளி நிர்வாகங்கள் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் சூரத்தில் உள்ள சில பள்ளிகள் மாணவர்களுக்கு மைண்ட் ஃபிரஷ் ஆக்டிவிட்டிகளுடன் ஆப்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. அதே போல அகமதாபாத்தில் உள்ள சில பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விரும்புவதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் குஜராத்தில் நேற்று (பிப்.6) ஒரு நாளில் 3,897 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here