பிப்.8ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

0
பிப்.8ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
பிப்.8ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
பிப்.8ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவின் முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 7 மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

பொது விடுமுறை

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக திரை உலகத்தில் பல உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று காலை ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் அவர் காலமானார். இவர் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டுத் துறை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இதையடுத்து இவரது மறைவுக்கு 7 மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை தற்போது விரிவாக பார்க்கலாம். முதலாவதாக மகாராஷ்டிராவில் இன்று ஒரு நாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மும்பை சிவாஜி பார்க்கில் இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் & பான் இணைப்பு இறுதி நாள்!

இதனை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் இன்று ஒருநாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் லதா மங்கேஷ்கரின் பாடல்களை ஒலிபரப்புமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேசம் 2 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மூவர்ணக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து கர்நாடகா, சிக்கிம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. கோவாவில் அரசு விடுமுறையாக 3 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 நாட்களும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இவ்விரு நாட்களில் அரசு சார்பாக பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!