தமிழக அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசுடன் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ – கால அவகாசம் நீட்டிப்பு!

0
தமிழக அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசுடன் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசுடன் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசுடன் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ – கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் வருடா வருடம் நடைபெற்று வரும் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெரும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த போட்டிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

தமிழகத்தில் வருடம் தோறும் “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூபாய் மற்றும் தங்கபதக்கம் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்.8ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்த சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2021 என முன்னதாக செய்தி வெளியிடப்பட்டது. இருப்பினும் தற்போது முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 28.02.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!

இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த வகையில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 28.02.2022 ஆகும். மேலும் இந்த போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!