தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!

தமிழகத்தில் அங்கன்வாடியில் உள்ள LKG , UKG வகுப்புகள் மூடப்படுவதாக சர்ச்சை எழுந்து உள்ளது. இந்த சர்ச்சை குறித்து தொடக்கக் கல்வி துறை, LKG , UKG வகுப்புகள் மூடப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். மேலும் LKG , UKG வகுப்புகளில் பாடம் நடத்தத் தேவையான ஆசிரியர்களை பணியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளது.

மீண்டும் பள்ளிகள் மூடல்:

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தனியார் மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை அதிகரித்தால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் அ.தி.மு.க தலைமையில் கடந்த 2018-ம் ஒரு அரசாணை கொண்டுவரப்பட்டது, இந்த அரசாணையின் கீழ் அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அடிப்படையில் மொத்தம் 2,381 அங்கன்வாடிகளில் பயின்று வந்த சுமார் 52,933 மாணவர்கள் நேரடியாக LKG மற்றும் UKG வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மேலும் இங்கு பயிலும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த வகையில் அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் இந்த மழலையர் பள்ளிகளை நடுநிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் கவனிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளபட்டதில், தலைமை ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளைச் சரிவரக் கவனிக்காதது தெரிய வந்தது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – ஓரிரு நாட்களில் வெளியீடு!

மேலும் பல பகுதிகளில் மாணவர்கள் சேர்க்கையும் மிகவும் குறைவாகவே இருந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எந்த தனி கவனமும் செலுத்தப்படவில்லை என்பதும், வகுப்புகளை நடத்தத் தேவையான ஆசிரியர்களும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனைச் சரிசெய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை அந்த வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறினார்கள். விரைவில் அங்கன்வாடிகளில் செயல்படும் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று விளக்கம் அளித்திருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here