தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அரசுக்கு புதிய கோரிக்கை!

3
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அரசுக்கு புதிய கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அரசுக்கு புதிய கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அரசுக்கு புதிய கோரிக்கை!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகள் அரசுக்கு புதிய கோரிக்கை முன்வைத்து உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களின் கல்வி பாதிப்படையாத வண்ணம் வகுப்புகள் ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் ஓரளவு குறைந்த பின் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு மறுதேதி அறிவிப்பின்றி விடுமுறை அளிக்கப்பட்டது.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆவணங்கள் இன்றி ஒரே நாளில் 1 லட்ச ரூபாய் பெறலாம்!

அதன் பின் தடுப்பூசிகள் பயன்பட்டால் எதிர்பார்த்த அளவு கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து கல்வியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுநா் சோ்க்கை – ஆட்சியர் அறிவிப்பு!

இதனை ஆராய்ந்து நவம்பர் 1ம் தேதி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளை திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1 முதல் 5 வகுப்புகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் வெகு நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். எனவே பள்ளிகளை திறப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Don’t open school for 1 to 5 standard.its not right time to send the kid’s school.some private school notification children should come to school compulsory and also they don’t take online classes on 8 November onwards.but government protocol parents wishes to send the kids attendence not compulsory.what we do

  2. No need to open schools to kids play school, pre kinder garden, lower kinder garden, upper kinder garden . For students fron for standard to fifth standard also Schools should not open . It can be considered from January 2022 to April 2022 , May summer vacation as usual and then June 2022 Re-open as usual.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!