ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

0
ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்கு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களையும் ஜனவரி 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை அறிவிப்பு:

நாட்டில் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு தனது 3ம் அலையை தொடங்கியிருக்கிறது. இந்த முறை ஆரம்ப நாட்களிலேயே பாதிப்பு எண்ணிக்கையானது அதிக அளவில் இருப்பதால் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும், பகல் நேரங்களிலும் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாநிலங்களிலும் படிப்படியாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் – DA உடன் சேர்த்து HRA அதிகரிப்பு?

புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 2,093 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு TPR 34.72% ஆக உள்ளது. இதனால் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்ட்டுள்ளதாகவும், 15-18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதால், 10 முதல் 12 வகுப்புகள் வரை தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!

புதுச்சேரியில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் அனைத்து நேரடி வகுப்புகளையும் தடை செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படும். 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 60 முதல் 65 சதவீதம் பேருக்கு இன்று வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மொத்த மாணவர்களில் 20 % பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கவில்லை. தடுப்பூசி போடுவதற்கு பெற்றோர் ஒப்புதல் அளித்த மீதமுள்ள 15 சதவீத மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும் தடுப்பூசி போடப்படும் என்று கூறியுள்ளார். மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here