மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் – DA உடன் சேர்த்து HRA அதிகரிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் - DA உடன் சேர்த்து HRA அதிகரிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் - DA உடன் சேர்த்து HRA அதிகரிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் – DA உடன் சேர்த்து HRA அதிகரிப்பு?

மத்திய அரசு ஊழியர்கள் வரவிருக்கும் நாட்களில் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையை பெற இருக்கும் நிலையில் இதனுடன் அவர்களுக்கான HRA தொகையும் கணிசமாக உயர்வை காணும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

HRA உயர்வு

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையானது 34 சதவீதமாக நீட்டிக்கப்பட இருப்பதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள ஊடக அறிக்கையின்படி, DA அதிகரிப்புடன், அதன் ஒரு முறை நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நீண்ட காலமாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 18 மாத DA நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – பெயர்களை சேர்ப்பது எப்படி?

இது குறித்த முடிவு ஜனவரி 26ஆம் தேதிக்குள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் மத்திய அரசு இந்த DA நிலுவைத் தொகையை வழங்கினால், ஊழியர்களுக்கு பெரும் தொகை பரிசாக கிடைக்கும். இதை தொடர்ந்து அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) விரைவில் அதிகரிப்பை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜூலை 2021ல் ஏற்பட்ட அகவிலைப்படி அதிகரிப்புக்கு பின்னர் HRA தொகை திருத்தப்பட்டது. தற்போது, HRA விகிதங்கள் நகர்ப்புற வகையின்படி 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் ஆக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!

பின்னர் DA தொகை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அப்போதிருந்து, HRA இல் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இப்போது ஊடக அறிக்கைகளின்படி, HRA இன் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும். அதாவது, அதிகபட்ச தற்போதைய விகிதம் 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் போது இது நடக்கும். ஏனென்றால், DA தொகை 50% தாண்டினால், வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) 30% தாண்டும் என்று அரசின் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!