SBI வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0

SBI வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க…!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள FLC Counsellor, FLC Director பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, FLC Counsellor பணிக்கு 207 பணியிடங்கள் மற்றும் FLC Director 04 பணியிடங்கள் என மொத்தமாக 211 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
  • FLC Counsellors பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SBI / e-ABs / other PSBs / RRBs வங்கி நிறுவனங்களில் Scale I அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • FLC Directors பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SBI / e-ABs / other PSBs / RRBs வங்கி நிறுவனங்களில் Scale III அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • 15.06.2022 அன்றைய நாளின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 60 வயது முதல் 63 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் குறைந்தது ரூ.35,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதிய தொகை வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!