GPay, Paytm பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

0
GPay, Paytm பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
GPay, Paytm பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
GPay, Paytm பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பணம் திருடுபவர்களும், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளும், உருவாக்கும் திட்டங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், நம்மை நாமே தான் பார்த்துக்கொள்ள வேண்டும், பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என SBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

SBI எச்சரிக்கை:

இந்தியாவில் யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் மாநகரங்கள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் பே, போன்பே போன்ற UPI ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை தான் என்றாலும் கூட, அதில் பல மோசடிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த அறிக்கை எஸ்பிஐ வங்கி பயனாளர்களுக்கானது மட்டுமல்ல Google Pay, Paytm, PhonePe அல்லது பிற UPI ஆப்களை பயன்படுத்தும் அனைவருக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download
  • யுபிஐ பின் என்பது பணத்தை டிரான்ஸ்பர் செய்ய மட்டுமே தேவைப்படும், பணத்தை பெறுவதற்கு அல்ல. அதாவது யுபிஐ பின் என்பது ஒடிபி (OTP) அல்ல. எனவே உங்கள் யுபிஐ பின்-ஐ எக்காரணத்தை கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம்.
  • QR Code Scanner பண பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் தேவை இல்லாமல் எந்தவொரு ஒரு க்யூ ஆர் கோட் ஸ்கேனரையும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.
  • புகார் எண் அல்லது Consumer redressal number போன்றவைகளை கூகுளில் அணுக கிடைக்கும் எப்போதுமே அதிகாரப்பூர்வ ஆதாரங்களை தவிர வேறு எந்த Source-களிலிருந்தும் புகார் எண்களை தேட வேண்டாம்.
  • உங்களுக்கு பணம் செலுத்துவதில் அல்லது பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு நடந்தால், குறிப்பிட்ட ஆப்பின் ஹெல்ப் செக்ஷனை (Help section) அணுகவும்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

  • ஹெல்ப் செக்ஷன் வழியாக உங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால், கூடுதல் தகவல்களுக்கு DigiSaathi 24×7 ஹெல்ப்லைனை அணுகவும். அறியாதோர்களுக்கு DigiSaathi என்பது ஒரு ஆட்டோமேடட் ரெஸ்பான்ஸ் சப்போர்டட் சிஸ்டம் ஆகும். இது நிதி, வங்கி, டிஜிட்டல் பேமண்ட் ப்ராடெக்ட் மற்றும் கார்ட்ஸ் (கிரெடிட், டெபிட் மற்றும் ப்ரீபெய்ட்), மற்றும் நெட் பேங்கிங் பேமண்ட்ஸ் (UPI, NEFT, RTGS, IMPS, AePS, NETC, BBPS, USSD, ATM, QR Code) போன்ற சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தீர்வளிக்கும் தளமாகும்.
  • யுபிஐ வழியாக யாருக்கு பணம் அனுப்பினாலும் சரி, குறிப்பிட்ட நபரின் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை – ஒன்றுக்கு இரண்டு முறை – நன்றாக சரிபார்த்த பின்னர் பணத்தை அனுப்பலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!