ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவின் வெற்றிப் பயணம் – ஏமாற்றம், அவமானத்தை கடந்து சாதித்த கதை!

0
ஜீ தமிழ் 'சத்யா' சீரியல் நடிகை ஆயிஷாவின் வெற்றிப் பயணம் - ஏமாற்றம், அவமானத்தை கடந்து சாதித்த கதை!
ஜீ தமிழ் 'சத்யா' சீரியல் நடிகை ஆயிஷாவின் வெற்றிப் பயணம் - ஏமாற்றம், அவமானத்தை கடந்து சாதித்த கதை!
ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவின் வெற்றிப் பயணம் – ஏமாற்றம், அவமானத்தை கடந்து சாதித்த கதை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சத்யா’ சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை ஆயிஷா சின்னத்திரையில் முத்திரை பதிக்கும் முன் அவர் சந்தித்த தோல்வி, விமர்சனங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை குறித்த விஷயங்களை இப்பதிவில் காணலாம்.

நடிகை ஆயிஷா

இன்றைய கால கட்டத்தில் சினிமாவுக்கு இணையாக சீரியல்களும் உருவாக்கப்பட்டு வருவதால் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல சீரியல் நடிகர், நடிகைகளும் ஆக்சன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி வித்தியாசமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரும், புகழும் பெற்றிருப்பவர் ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷா.

தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ரேஷ்மா, சமாதானம் செய்த மதன் – திருமண வீடியோ வைரல்!

கேரளாவை சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஆயிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடரில் குடும்பத்துக்கு மூத்த பெண்ணாக இருந்து குடும்ப பொறுப்புகளை சுமக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார் ஆயிஷா. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை இந்த சீரியல் இயக்குநருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியிலேயே அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து சன் டிவியின் ‘மாயா’ சீரியல் மூலம் மீண்டுமாக ரசிகர்ளை மகிழ்வித்து வந்த இவருக்கு ஜீ தமிழ் டிவியில் இருந்து மிகப்பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது தான் ‘சத்யா’ சீரியல். இத்தொடரில் ஒரு ஆண் போன்ற சிகை அலங்காரம் கொண்ட தோற்றத்துடன் நடித்து வந்த நடிகை ஆயிஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இதனுடன் இந்த சீரியலில் அவரது நடிப்பு, பேச்சு மூலம் ரவுடி பேபி என்று ரசிகர்களால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார் ஆயிஷா.

நடிகை ரேஷ்மாவுக்கு மெட்டி போட்டு விடும் மதன் – திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!

பொதுவாக ஒல்லியான தேகம், நடிக்க தெரியாதவர் என்றெல்லாம் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த நடிகை ஆயிஷா இப்போது தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி நாயகியாக உருவாகி இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. இப்படி பல்வேறு அவமானங்களை தாண்டி சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் நடிகை ஆயிஷா, நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து ‘சத்யா’ சீரியலின் 2ம் பாகத்தில் ரவுடி பேபியாக மீண்டுமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!