பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

0
பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் ஒன்றாக நடித்து வந்த சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து சுற்றுலா சென்று, அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

சுற்றுலா புகைப்படங்கள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சின்னத்திரையில் முன்னணியில் உள்ள சீரியல்கள் பட்டியலில் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவரும் மிகவும் பிரபலமாக உள்ளனர். இதனால் அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் உள்ள பின்தொடர்பவர்களின் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் பரவி விடுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கடைசி தம்பி கண்ணனாக நடித்து வருபவர் சரவண விக்ரம்.

‘ஷ்ரேயாவை எனது மனைவியாக நினைக்கவில்லை’ – மனம் திறந்த ‘ராஜா ராணி’ சீரியல் சித்து!

இவர் மிகவும் குறும்பான கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் முன்னதாக வைஷாலி நடித்து வந்தார். அதன் பின்னர் விஜே தீபிகா நடித்தார். அவருக்கு முகத்தில் இருக்கும் அலர்ஜி காரணமாக சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, சாய் காயத்திரி இந்த வேடத்தில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சமயத்தில் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் நண்பர்களாக மாறி விட்டனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

இதனால் இப்போது சேர்ந்து நடிக்காத சமயத்திலும் கூட ஒன்றாக சேர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பல பதிவுகளை இட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து யூடூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த படியே எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவர்களின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதனால் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!