தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மண் எடுத்தல்:

தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தான் மண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது அதனை திருத்தி செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண் எடுக்க சுதந்திரம் வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

அதனை தொடர்ந்து தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். ஏரிகளை ஒட்டிய பகுதிகளில் 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலையிலிருந்து 10 மீட்டருக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை, ஆறுகளில் இருந்து 50 மீட்டருக்குள்ளும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2021 : பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி? இன்று ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை!

சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தான் மண் எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலையில் தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது அதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்டத் தொழில் செய்வோா், செங்கல் சூளை வைத்திருப்போர், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோா் ஆகியோா் மண் எடுக்க அனுமதி தேவையில்லை என்று அறிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!