TNPSC பொது தமிழ் – சமய முன்னோடிகள்

0

TNPSC பொது தமிழ் – சமய முன்னோடிகள் 

இங்கு சமய முன்னோடிகள்  பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

திருவாவுக்கரசர்

தேவாரம்

ஆசிரியர் குறிப்பு

  • திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் புகழனார், மாதினியார், இவரது தமக்கையார் திலகவதியார்.
  • திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டபெயர் மருணீக்கியார்.
  • இவருக்குத் தருமசேனர், அப்பர்,வாகீசர் என்னும் பெயர்களும் உண்டு.
  • இவரது நெறி தொண்டு நெறி.
  • சைவ அடியார்களை நாயன்மார்கள் என்றழைப்பர்.
  • இவர்கள் அறுபத்து மூவர்.
  • சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர்.
  • இவர் தம் பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகின்றது.
  • இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். ஆதலால், இவர் தாண்டகவேந்தர் எனவும்
  • அழைக்கப்படுகிறார்.
  • இவரது காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு திருவாமூர்,கடலூர் மாவட்டம்
  • பண்ணுருட்டியை அடுத்துள்ளது.

நூற் குறிப்பு

  • தேவாரம் என்னும் சொல்லைத் தே + வாரம் எனப் பிரித்துத் தெய்வத் தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்றும், தே ஆரம் எனப் பிரித்துத் தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம்.
  • திருநாவுக்கரசர் பாடிய அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.
  • திருநாவுக்கரசர் அருளிய ஆறாந்திருமுறையில் உள்ளது.
  • தமிழகத்தில் விடுதலை வேட்கைக் கனலைத்தம் வீறுகொண்ட பாக்களால்
  • மக்களைத் தட்டியெழுப்பிய மகாகவி பாரதியின் அச்சமில்லை! அச்சமில்லை எனும் பாடலுக்கு முன்னோடி இத்திருந்தாண்டகப் பாடலே!
  • தேவாரம்
    “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
    தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே”.- திருநாவுக்கரசர்

மாணிக்கவாசகர்

ஆசிரியர் குறிப்பு

  • சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்.
  • மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தவர்.
  • மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்.
  • பாண்டியனுக்காக் குதிரை வாங்க சென்ற போது திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  • அவ்விறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர்.
  • இதனால் மாணிக்கவாசகரை அழுது அடியடைந்த அன்பர் என்பர்.
  • திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியவை.
  • இவர் எழுப்பிய கோவில் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
  • இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு

நூற் குறிப்பு

  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
  • திருவாசகத்தில் அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
  • திருவாசம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால் திருவாசகத்திற்கு உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று.
  • திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற்பாடல் நம்பாடப் பகுதியாக அமைந்துள்ளது.
  • திரு என்பது நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி.
  • நூறு பாடல்களைக் கொண்ட நல் சதகம் எனப்படும்.
  • உலக வரலாற்றிலேயே மேதையாக மாணிக்கவாசகரைவிடப் புலமை உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல் இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தை கவர்கின்றவர் யாரும் இல்லை என்று ஜி.யு.போப் அவர்கள் கூறியுள்ளார்.
  • வாழ்த்து
    மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
    யார்கழற்கென்
    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
    வெதும்பிஉள்ளம்
    பொய்தான் தவிர்ந்து;னனைப் போற்றி சயசய
    போற்றி என்னும்
    கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
    கண்டுகொள்ளே.- மாணிக்கவாசகர்

சீத்தலைச் சாத்தனார்

  • முழுப்பெயர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • இப்பெயர் உணர்த்தும் செய்தி: இயற்பெயர் சாத்தனார். ஊர் மதுரை அருகே இருந்த சீத்தலை. தொழில் கூலவாணிகம் செய்தல் (கூலம் என்றால் தானியம் என்று பொருள்)
  • வேறுபெயர்: தண்டமிழ்ச்சாத்தன் தண்டமிழ்ப் புலவன்
  • காலம் 2 ஆம் நூற்றாண்டு சமயம் – பௌத்த சமயம்
  • இலக்கியத்தில் சமயப்பூசலுக்கு முதன்மை கொடுத்தவர்.
  • துறவுக்கு முதன்மை கொடுத்து நூல் எழுதியவர்.
  • இவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர்.

எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை

  • 23.04.1827 இல் பாளையங்கோட்டை அருகே உள்ள கரையிருப்பு என்ற ஊரில் சங்கர நாராயணன் – தெய்வநாயகி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • திருப்பாற்கடல்நாத கவிராயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
  • டாக்டர் கால்டுவெல் கி.பி. 1853 இல் சாயர்புரம் திருமுறைக் கல்லூரியில் இவரைத் தமிழாசிரியராய் நியமித்தார்.
  • 1857 இல் கிறித்தவச் சமயத்தை தழுவினார்.
  • தான் பாடம் நடத்திய ‘ஹென்றி’ என்பவரின் பெயரையும் தனக்கு ஞானஸானம் செய்து வைத்த ஆல்பர்ட் என்பவர் பெயரையும் தம் பெயருடன் சேர்த்துக் கொண்டு ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை ஆனார்.
  • 1876ல் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
  • 03.02.1900 ல் இயற்கை எய்தினார்.
  • இயற்றிய செய்யுள் நூல்கள்: இரட்சணிய யாத்திரிகம் (இது ஆங்கிலத்தில் ஜான்பனியன் இயற்றிய “திருப்பணியின் முன்னேற்ம் என்ற நூலின் வழிநூல்) இரட்சணிய மனோகரம் போற்றித்திரு அகவல்
    இவர் எழுதிய இராட்சணியக் குறள், இரட்சணிய பால போதனை என்ற இருநூலும் கிடைக்கவில்லை.
  • உரைநடை நூல்கள்: இலக்கண சூடாமணி, இரட்சணிய சமய நிர்ணயம் , பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை கிறித்தவரான வரலாறு. (தம் மதமாற்றத்தைத் தாமே எழுதியுள்ளார்).
  • கிறித்தவக் கம்பர் என அழைக்கப்படுபவர்.
  • கிறித்துவர்களின் தேவாரம் இரட்சணிய மனோகரம்.

உமறுப்புலவர்

  • முழுப் பெயர் உமறுகத்தாப்
  • ஊர் கீழக்கரை
  • ஆசிரியர் கடிகை முத்துப் புலவர்
  • எட்டையபுர ஜமீனின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர்.
  • இவரை ஆதரித்தவர்கள் இருவர்: 1. சீதக்காதி வள்ளல் 2. ஆப்துல்காசிம் மரைக்காயர்
  • சீதக்காதி இறந்தபின் அப்துல் காசிம் ஆதரித்தார்.
  • சீதக்காதியின் இயற்பெயர் செயத்காதர் என்றும் (மு.வ) செய்கு அப்சல்காதர் மரைக்காயர் என்றும் (மது.ச.வி) கூறுகின்றார்.
  • சீதக்காதி, கிழவன் சேதுபதி விசயரகுநாதத் தேவரிடம் அமைச்சராக இருந்தவர்.
  • இஸ்லாமிய கம்பர் எனப்படுபவர் உமறுப்புலவர்
  • உமறுப்புலவர் பாடாது விட்ட பகுதியைப் பாடியவர் பனீ அகமது மரைக்காயர்.
  • உமறுப்புலவரின் மகன் கவிக்களஞ்சியப் புலவர்.

சமய முன்னோடிகள் PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!