மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

0
மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி - ஏற்பாடுகள் தீவிரம்!
மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி - ஏற்பாடுகள் தீவிரம்!
மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை கண்காட்சியை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விற்பனை கண்காட்சி:

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலவாழ்விற்காக பல சிறப்பு அறிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் அனைத்தும் முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022- 2023ம் ஆண்டின் அரசு திட்டத்தின் படி, பொங்கல், கிறிஸ்மஸ் பண்டிகைகளை முன்னிட்டு அரசு மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்க பணம் – வெளியான முக்கிய தகவல்!

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தெரசா மகளிர் கல்லூரி வளாகத்தில் 30.12.2022 முதல் 10.01.2023 வரை மாநில அளவிலான கண்காட்சி நடக்க உள்ளது. இதில், கலந்து கொள்ள விரும்பும் சுய உதவி குழுவினர் தங்களை கிண்டி, எண்.100, அண்ணாசாலை, சென்னை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்/தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்,
எண்.100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை-600 032.
(மாசு கட்டுப்பாட்டு வாரியம் அருகில்)
தொலைபேசி எண். 044-2235 0636

Follow our Instagram for more Latest Updates

என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழுக்கள் 20.12.2022 வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்/தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!