ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் – டாப் 5 பட்டியல் இதோ!

0
ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் - டாப் 5 பட்டியல் இதோ!
ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் - டாப் 5 பட்டியல் இதோ!
ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் – டாப் 5 பட்டியல் இதோ!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் முடிவை எட்டியுள்ள நிலையில், இந்த சீசனில் அதிக சம்பளம் பெறும் வீரர்களின் டாப் 5 பட்டியலை பற்றி இந்த பதிவில் காண்போம்.

ஐபிஎல் 2021 டாப் வீரர்கள்:

நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் முன்னதாக இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் லீக் சுற்று முடிந்து அணிகளுக்கு இடையிலான ப்ளே ஆப் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு ப்ளே ஆஃப் சுற்றுகள் மட்டுமே மீதமுள்ளது.

பொருளாதாரத்திற்கான 2021 நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் உயர்தர உரிமையாளர்கள் முதல் பிராண்டுகள் வரை ஸ்பான்சர் செய்து வருகிறது. தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஒரு சம்பளம் நிர்ணயித்து ஏலம் மூலம் எடுத்து கொள்கிறார்கள். சர்வதேச வீரர்கள் மட்டுமில்லாமல் சாதாரண வீரர்கள் வரை அனைவருக்கும் கோடிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் ஆட்டத்தை பொறுத்து அவர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஐபிஎல் 2021ல் அதிக சம்பளம் பெற்ற முதல் 5 வீரர்களின் பட்டியல்:

விராட் கோலி:

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி அதிகபட்ச சம்பளம் ரூ. 17 கோடி பெற்றுள்ளார்.

எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் எம்எஸ் தோனியின் சம்பளமாக 15 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா:

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) கேப்டன் ரோஹித் சர்மா 15 கோடி சம்பளத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

பட்டியலில் 4 வது இடத்தில் சிஎஸ்கேவின் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா 11 கோடி சம்பளம் பெறுகிறார்.

ஏபி டிவில்லியர்ஸ்:

ஆர்சிபியின் ‘மிஸ்டர் 360’ மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 11 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!