பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தாமரை செல்வி பெற்ற மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தாமரை செல்வி பெற போகும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாமரை செல்வி:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் பதிந்து விட்ட தாமரை செல்வியை இனி வெள்ளித்திரையில், சின்னத்திரை சீரியல்களிலும் கூட பார்க்கலாம். அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் அதிக ரசிகர்கள் தாமரை செல்விக்கு கிடைத்துள்ளார்கள். நாடகத்தில் தெருக்கூத்து ஆடி வரும் தொழிலை செய்யும் தாமரை இந்த வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப வாரத்தில் தாமரை வெளியேறி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்தி – ஒரே போட்டோவில் முற்றுப்புள்ளி வைத்த ஜோடி!
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாமரை நிகழ்ச்சியில் 98ம் நாள் வரை வந்துள்ளார். இது இவர் தனித்தன்மையுடன் ஆடி வந்ததால் தான் என்று பலரும் கூறிகின்றனர். பிக் பாஸ் பணப்பெட்டியை அனுப்பும் போது கூட தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் தாமரை அந்த 12 லட்சம் ரூபாயை எடுக்காமல் இருந்துள்ளார். ஆனால் அடுத்த 2 நாட்களில் அவர் விளையாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாமரைக்கு வாரத்திற்கு ரூ.70 ஆயிரம் சம்பளம் பேசியுள்ளனர்.
செம்பருத்தி கார்த்தி நடிப்பில் விரைவில் விஜய் டிவி “ஆபிஸ் சீசன் 2” சீரியல் – ஷாக் ப்ரோமோ!
அதில் தாமரை 14 வாரங்கள் இருந்துள்ளதால் ரூ,9,80,000 கிடைக்கும். அதில் 12% வரி போக மீதம் ரூ 6 லட்சத்திற்கும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த அளவு வரி போக தான் போட்டியாளர்களுக்கு அவர்களின் சம்பளம் கிடைக்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், புதிய தகவலாக தாமரை குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார் என்பது தெரிகிறது.