செம்பருத்தி கார்த்தி நடிப்பில் விரைவில் விஜய் டிவி “ஆபிஸ் சீசன் 2” சீரியல் – ஷாக் ப்ரோமோ!

0
செம்பருத்தி கார்த்தி நடிப்பில் விரைவில் விஜய் டிவி
செம்பருத்தி கார்த்தி நடிப்பில் விரைவில் விஜய் டிவி "ஆபிஸ் சீசன் 2" சீரியல் - ஷாக் ப்ரோமோ!
செம்பருத்தி கார்த்தி நடிப்பில் விரைவில் விஜய் டிவி “ஆபிஸ் சீசன் 2” சீரியல் – ஷாக் ப்ரோமோ!

விஜய் டிவியில் பிரபலமான “ஆபிஸ்” சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ஆபிஸ் சீசன் 2:

விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ சீரியலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அலுவலகங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும், ஆபிஸ்ஸில் செய்யும் காதலை பற்றியும் இந்த சீரியல் கதை காமெடி கலந்து சொல்லும். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலின் முந்தைய ஹீரோ கார்த்திக் தான் ஆபிஸ் சீரியலில் ஹீரோவாக நடித்தார்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி டைட்டில் வின்னர் இவர் தானாம் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். இவர்களின் நண்பர்களாக விஷ்ணு – மதுமிலா ஜோடி நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் இது இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. 562 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் காமெடி கலந்த நகைச்சுவை தொடராக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ராஜலட்சுமி என்ற ஒரு பெண் எதிர்கொள்ளக் கூடிய விஷயங்கள், வேலை, நட்பு, காதல், திருமணம் எனப் பல வித்தியாசமான கதை இருக்கிறது.

கண்ணாமூச்சி ஆடும் எழில், அண்ணன் மீது பயங்கர கோவத்தில் இருக்கும் கயல் – இன்றைய “கயல்” சீரியல் எபிசோட்!

இந்த சீரியல் இரண்டாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் ஆபிஸ்ஸில் எந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும் காதல் காட்சிகளில் உள்ள கால மாற்றங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு இரண்டாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த ப்ரோமோ ஆபிஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here