மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 31க்குள் ரூ.90,000 ஆக உயர்வு? அகவிலைப்படி அப்டேட்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 31க்குள் ரூ.90,000 ஆக உயர்வு? அகவிலைப்படி அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 31க்குள் ரூ.90,000 ஆக உயர்வு? அகவிலைப்படி அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 31க்குள் ரூ.90,000 ஆக உயர்வு? அகவிலைப்படி அப்டேட்!

மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அரசின் இந்த அறிவிப்பால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அமைச்சரவை ஜூன் 2017 இல் 34 மாற்றங்களுடன் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி தொடக்க நிலை அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்படும் புதிய ஊதிய விகிதங்கள் மாதம் ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும். முதல் நிலை அலுவலர்களுக்கு ஆரம்ப சம்பளம் 56,100 ரூபாய், செயலாளர் நிலையில் இருப்பவர்களுக்கு 90,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சமாக உயர்ந்தது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் இறுதியாக 31% அகவிலைப்படி பெற்று வருகிறார்கள்.

ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியில் நன்றி கூறிய பிரபல சீரியல் நடிகை – எதற்காக தெரியுமா?

மேலும், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மார்ச் மாதத்தில் அரசு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் தற்போது 31 சதவீத அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்படும். ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்திய அரசின் சம்பளம் ரூ.90,000 வரை உயர்த்தப்படும். டிசம்பரில் வெளியிடப்பட்ட AICPI தரவுகளுக்குப் பிறகு DA உயர்வு தொடர்பான அறிவிப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜேசிஎம் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதில், பணவீக்க விகிதத்தில் மத்திய ஊழியர்கள் பணம் பெற வேண்டும். நிலுவையில் உள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகையின் நிலை குறித்து அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், 3% டிஏ உயர்வு அரசு ஊழியர்களுக்கு விரைவான நிவாரணத்தை அளிக்கும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.30,000 என்றால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.900 அதிகரிக்கும். ஆண்டு அடிப்படையில், அவரது மொத்த சம்பளம் நேரடியாக ரூ.10,800 அதிகரிக்கும். அமைச்சரவை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளின் சம்பளம் மாதம் 7500 ரூபாயாக அதிகரிக்கப்படும். இதன் விளைவாக, அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படையில் ரூ.90,000 வரை கூடுதல் பலன்களை பெறுவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!