ரூ.15,000 வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் கவனத்திற்கு – ரூ.3000 பென்ஷன்! சூப்பர் அறிவிப்பு!

0
ரூ.15,000 வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் கவனத்திற்கு - ரூ.3000 பென்ஷன்! சூப்பர் அறிவிப்பு!
ரூ.15,000 வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் கவனத்திற்கு - ரூ.3000 பென்ஷன்! சூப்பர் அறிவிப்பு!
ரூ.15,000 வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் கவனத்திற்கு – ரூ.3000 பென்ஷன்! சூப்பர் அறிவிப்பு!

மாத சம்பளம் 15 ஆயிரத்திற்கு குறைவாக வாங்குபவர்களுக்கு மாதம் மாதம் 3000 பென்ஷன் அளிக்கும் விதமாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் புதிய திட்டம்:

நாடு முழுவதும் மத்திய அரசால் பல்வேறு புதிய மற்றும் சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்கள் சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டு வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் (PM-SYM) ஆகும். அத்தகைய திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதாவது தெரு வியாபாரிகள், ரிக்‌ஷா டிரைவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மதிய உணவு தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேல் உள்ளனர். இத்தகைய திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம். அதிலும் முக்கியமாக மாத வருமானம் 15 ஆயிரம் அல்லது அதற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும். இது உலகின் மிகப்பெரிய ஒரு வகையான ஓய்வூதிய திட்டம் ஆகும்.

தமிழகத்தில் கடைகள், கோவில்கள் திறப்பு & வேலைவாய்ப்பு முகாம்கள் – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைமுறை செய்யப்பட்டு தொடங்கப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டத்தில் சேர்ப்பவர்கள் அவர்களது 60 ஆவது வயது தொடக்கத்தில் இருந்தே மாதம் 3000 பென்ஷன் ஆக வழங்கப்படும். மேலும் அந்த பயனாளி வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டால் அவருக்கு பிறகு அவரது துணைக்கு 50% பென்ஷன் வழங்கப்படும். இத்தகைய திட்டத்தின் நோக்கமே மக்களுக்கு உதவுவது தான். அதுமட்டுமல்லாமல் பயனாளி 10 வருடத்திற்கு முன்பே இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் விலக நினைத்தால் நீங்கள் இதுவரை சேமித்த தொகை மட்டுமே உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். அதுவே 10 வருடங்களுக்கு பிறகு 60 வயது தொடங்குவதற்கு முன்பு இந்த திட்டத்தில் இருந்து விலக நினைத்தால் உங்கள் சேமிப்பு பணத்துடன் வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.

சென்னை: கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!

இத்திட்டத்தின் முக்கியமான ஒன்று 18 வயது நிரம்பிய ஒருவர் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அவர் செலுத்தும் அதே தொகையை அரசும் அவரது வங்கிக்கணக்கில் சேமித்து வரும். இதனால் அவரது கணக்கில் இரட்டிப்பாக சேமிக்கப்படும். அதேபோல, 29 வயதில் இணைந்தால் 100 ரூபாயும், 40 வயதில் இணைந்தால் 200 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும். அவ்வாறாக 55 ரூபாய் செலுத்தினால் அது 110 ரூபாயாக சேமிக்கப்படும். மேலும் இத்திட்டம் குறித்து விளக்கம் அறிந்துகொள்ள 1800 2676888 என்ற டோல் ஃபிரீ எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!