தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம் – சேலம் பி1 ஸ்டேஷன் தேர்வு!!

0
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம் - சேலம் பி1 ஸ்டேஷன் தேர்வு!!
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம் - சேலம் பி1 ஸ்டேஷன் தேர்வு!!
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம் – சேலம் பி1 ஸ்டேஷன் தேர்வு!!

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்வது குறித்து சென்னை சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி.சங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முடிவில் சேலம் டவுன் காவல் நிலையம் சிறந்த காவல்நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த காவல் நிலையம்:

காவல் நிலையங்கள் வழக்குகளை விரைந்து முடிப்பது, குற்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் பார்த்து கொள்வது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, பொது மக்களிடம் நடந்து கொள்ளும் விதம், காவல் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

72-வது இந்திய குடியரசு தினவிழா- பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ரத்து!!

இந்நிலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வில் சேலம் டவுன் காவல் நிலையம் 5,558 புள்ளிகள் பெற்று தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை டவுன் காவல் நிலையம் 1418.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையம் 1242.35 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைத்தல் – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!

இந்த விருதினை சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் அவர்களிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார். இந்த விருது குறித்து சேலம் காவல் நிலையம் காவலர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் டவுன் காவல் நிலையத்தை சுற்றி புல்வெளி பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!