சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு – ஹெல்ப் லைன் எண்ணில் மாற்றம்!

0
சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு - ஹெல்ப் லைன் எண்ணில் மாற்றம்!
சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு - ஹெல்ப் லைன் எண்ணில் மாற்றம்!
சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு – ஹெல்ப் லைன் எண்ணில் மாற்றம்!

சபரிமலை பக்தர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹெல்ப் லைன் எண்ணில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகு றித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப் லைன்:

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்தும் காடு, மலை என ஏறி சபரிமலை யாத்திரை செய்து வருகின்றனர் பக்தர்கள். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பக்தர்கள் தினமும் 30 ஆயிரம் பேரை தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்தது.

கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தற்போது கனமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்தனர். சபரிமலை பக்தர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் www.sabarimala.kerala.gov.in. இந்த அதிகாரப்பூர்வ இணையத்தில் சபரிமலை பூஜைகள், வழிபாடு விவரங்கள், கட்டணம், நடை திறந்து அடைக்கும் தேதி முதலிய விவரங்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பக்தர்களின் உதவிக்காக தொலைபேசி எண் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. இந்த எண் திருப்பூணித்துறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

Post Office சேமிப்பு திட்டம் – குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுக்கு இரட்டிப்பு தொகை!

சொந்தமாக தொழில் செய்யும் ஸ்ரீகுமார் பக்தர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து வந்தார். நாளுக்கு நாள் அதிகமான அழைப்புகள் வந்த காரணத்தால் கேரள போலீஸ் டி.ஜி.பிக்கு தனது எண்ணை இதிலிருந்து விடுவிக்கும்படி மெயிலில் புகார் அனுப்பினார். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் மலையாள நாளிதழ்களின் உதவியை நாடினர். இந்த தகவல் செய்தியாக வெளியான காரணத்தால் இணையதளத்தை பராமரிக்கும் சி -டிட் நிறுவனம் தவறை சரி செய்து அந்த எண்ணுக்கு பதிலாக புதிய எண்ணை பதிவேற்றியுள்ளது. தற்போதைய ஹெல்ப்லைன் எண்கள்: 04735 202 100, 04735 202 016, 99461 00100 என மாற்றப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!