கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை குறைவினால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

விலை ஏற்றம், குறைவு போன்ற எந்த சூழலிலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் குறையப்போவதில்லை. உலகத்தில் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான பிரியம் குறித்து அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் சிறந்த முதலீடாகவும் உள்ளது. அவர்களின் கையிருப்புக்கு ஏற்றவாறு தங்கத்தை வாங்கி முதலீடு செய்து கொள்கின்றனர். நாட்டின் பொருளாதார நிலையிலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக சுபமுகூர்த்தம் நிறைந்த மாதம், அட்சய திருதியை மற்றும் பண்டிகை நாட்களிலும் தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

Post Office சேமிப்பு திட்டம் – குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுக்கு இரட்டிப்பு தொகை!

இது போன்ற சிறப்பு நாட்களாக இல்லாமல் இருக்கும் சாதாரண நாட்களில் தங்கத்தில் விலை குறைந்தே காணப்படும். கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை அதிக அளவில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் தங்கமானது ரூ.36,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,605-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை அறிவிப்பு!

ஆனால் நேற்றைய விலையை விட இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை குறைவினால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதன்படி, இன்றைய மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.768 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.36,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.96 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,517-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2.10 குறைந்து ரூ.68.80-க்கு விற்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!