பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை அறிவிப்பு!

0
பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை அறிவிப்பு!
பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை அறிவிப்பு!
பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை அறிவிப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிபிற்கான புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் துவக்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அண்ணா பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நடத்த உயர்கல்வித்துறை உத்தவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. மற்ற படிப்புகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அதிகாரிகளின் அலட்சியத்தால் தாமதம்!

இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான புத்தக கண்காட்சியை துணைவேந்தர் வேல்ராஜ் துவக்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டிற்கு 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்து வந்தனர்.

Jio vs Airtel சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – விலை ஏற்றத்திற்கு பின்! பயனர்கள் கவனத்திற்கு!

அதனால் கட்டணத்தை குறைப்பது குறித்து குழு அமைப்பட்டு ஆலோசனை செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ் மொழியில் பொறியியல் படிப்பை பயில்வதன் மூலம் கருத்துக்களை முழுமையாக உள்வாங்க முடியும் ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் பொறியியல் படிப்புகளை தாய்மொழியில் தான் பயில்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது, அடுத்ததாக முதலாமாண்டு ஆண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here