SA vs AUS 2023 Semi Final 2 : தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

0
SA vs AUS 2023 Semi Final 2 : தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!
SA vs AUS 2023 Semi Final 2 : தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!
SA vs AUS 2023 Semi Final 2 : தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

2023 உலக கோப்பை தொடரானது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டி வருகின்றனர்.

தற்போது டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் செய்து வருகிறது.

AUS vs SA 2023 Semi Final 2 Live Updates:

SA INNINGS – 111-4
  • 21-30வது ஓவர்: (111-4) தென்னாபிரிக்கா அணியின் கிளாசென் மற்றும் மில்லர் 50 ரன் பார்ட்னர்ஷிப்பை கடந்துள்ளனர். குறிப்பாக கிளாசென்  வாணவேடிக்கை காட்டி வருகிறார். 30 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் அவர் தலா 4 பவுண்டரி & 2 சிக்ஸர் விளாசியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வேகமாக 40 ரன்களை கடந்து விட்டது. இதே பார்மில் விளையாடினால் தென்னாபிரிக்கா அணி மதிப்புத்தக்க இலக்கை நிர்ணயிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.
  • 11-20வது ஓவர்: (67-4) தொடர்ந்து பொறுப்பாக விளையாடிய மார்க்ரம் ஸ்டார்ச் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இவரை தொடர்ந்து வான் டெர் டுசென் வெளியேறினார். அதன்பிறகு கிளாசென் மற்றும் மில்லர் பொறுப்பாக விளையாடினர். இதற்கிடையில் 45 நிமிடங்களுக்கு மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மில்லர் ஜாம்பா பந்தில் 2 சிக்ஸர்கள் அடித்தார்.
  • 1-10வது ஓவர்: (18-2) தென் ஆப்பிரிக்கா அணிக்கு தேம்பா பாவுமா மற்றும் டி காக் களமிறங்கி இறங்கினர்.  பவுமா ஸ்டார்க்கின் வேகத்தில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.  பிட்ச் ஸ்விங், வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை வழங்குவதால் விக்கெட்கள் சீட்டுக்கட்டு போல் சரிக்கின்றன. 9வது ஓவரில் மார்க்ரம் இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை இழந்து இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு.

முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிய இந்தியா – கோலி 50வது சதமடித்து அசத்தல்!!

இரு அணிகளின் பிளேயிங் 11:

ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர் ), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

தென் ஆப்ரிக்கா : குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர் ), டெம்பா பவுமா(கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!