BSNLன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் ரூ.108 மற்றும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
BSNL திட்டம்
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அரசாங்கத்தின் டெலிகாம் நிறுவனமான BSNL அவர்களுக்கு போட்டியாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது ரூ.108 மற்றும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு 80 பைசா மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்க்கு 1.20 பைசா வசூல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்தின் வருமானம் போச்சு – மாஸ் காட்டும் அரசு பேருந்துகள்!! பொதுமக்கள் ஹாப்பி!!
அதே போல ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு சேவை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.