தமிழகத்தில் ஆம்னி பேருந்தின் வருமானம் போச்சு – மாஸ் காட்டும் அரசு பேருந்துகள்!! பொதுமக்கள் ஹாப்பி!!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு 20 லட்சம் பயணிகள் கூடுதலாக அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
அரசு பேருந்துகள்:
தமிழகத்தில் ஒவ்வொரு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளில் ரூ.2000 வரையிலும் வசூல் செய்யப்படும் நேரத்தில் அரசு பேருந்துகளில் ரூ.600 வரை மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. அதிலும், குறிப்பாக பேருந்துகளில் எந்தவித குறையும் இல்லாமல் ஆம்னி பேருந்துகளை காட்டிலும் கூடுதல் வசதி வழங்கப்படுவதால் பெரும்பாலான பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வரும் நல்ல செய்தி – வெளியான தகவல்!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு 20 லட்சம் பயணிகள் கூடுதலாக அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அதே போல, இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 30 ஆயிரம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதே போல, பொதுமக்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நிறைவான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.