மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம் – வழிமுறைகள் என்னென்ன?

0
மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம் - வழிமுறைகள் என்னென்ன?

மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பெண் குழந்தைக்கு பலனளிக்கும் சூப்பர் திட்டம் குறித்த தகவல்களை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு:

ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக ஐந்து ஆண்டுகளுக்கு பெண் குழந்தைக்கு இலவசமாக மத்திய அரசு பணம் வழங்கி வருகிறது. திட்டத்தில் விண்ணப்பிக்கும் அந்த குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே பலனடைய முடியும். இதற்கு ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அப்பெற்றோர்கள் தங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் என்பதை ரூபாய் 100 முத்திரைத்தாளின் மூலமாக உறுதிமொழி பத்திரமாக மாஜிஸ்திரேட் அல்லது தாசில்தார் சான்றளிக்கப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பெண் குழந்தையின் பெயரில் ஆதார்,வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும். இதன் வாயிலாக ஜூனியர் ரிசர்ச் பெல்லோ இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31,000 உதவித்தொகை பெற முடியும். மேலும் சீனியர் ஆராய்ச்சி ஃபெல்லோக்களுக்கு மாதம் ரூபாய் 35,000 வழங்கப்படும். சிறப்பு தகுதியாக இத்திட்டத்தில் பலனடைய விரும்பும் பெண் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பிஹெச்டி முழு நேரமாக பயில வேண்டும்.

வழிமுறைகள்:

https://www.ugc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திட்டத்திற்கு பதிவு செய்து அங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட்டு புகைப்படம் மற்றும் கையப்பத்தை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டால் அப்பெண் இந்த உதவி தொகை திட்டத்தில் பலனடைய முடியும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!