அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை – அமைச்சரவை ஒப்புதல்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை - அமைச்சரவை ஒப்புதல்!

வரவுள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு மொத்தம் 26 க்கும் மேற்பட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாநில அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.

சிறப்பு திட்டங்கள்:

ஒடிசா மாநிலத்தில் தற்போது மாநில அமைச்சரவை கூட்டமானது நடந்து வருகிறது. இதில் வரவுள்ள லோக்சபா மற்றும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 26 வகையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒடிசா மாநிலத்தில் உள்ள 95.90 லட்சம் ரேஷன் அட்டை பயனாளிகள் குடும்பங்களுக்கும் ரூபாய் ஆயிரம் வாழ்வாதார உதவி தொகையாக வழங்கப்பட உள்ளதாக முதல்வர் நவீன் பட்டாயர் தெரிவித்துள்ளார். மேலும் 20 கிலோ மற்றும் 10 கிலோ கொள்ளளவு கொண்ட இரண்டு சணல் பைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரூபாய் 278.69 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிப்.15ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – கல்வித்துறை உத்தரவு!

இந்த இரண்டு திட்டங்களுக்கும் மாநில பட்ஜெட்டில் ரூபாய் 1237.74 கோடி செலவிடப்படும். குறிப்பாக 18 முதல் 35 வயது உட்பட்ட ஒரு லட்சம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு ஸ்வயம் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் வரையிலான வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும், இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் முக்கிய மந்திரி மாஷ்யாஜிபி கல்யாண் யோஜனா திட்டத்தின் வாயிலாக 11 ஆயிரம் பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மறைமுகமாகவும் ரூபாய் 50,000 வாழ்வாதார பலன்களை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!